2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஏ.ஆர்.மன்சூர்; வாழ்வும் பணிகளும் நூல் வெளியீடு

Editorial   / 2019 ஜனவரி 11 , பி.ப. 01:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.எம்.எம்.ஏ.காதர்

கல்முனை மாநகர சபையின் முன்ளாள் உறுப்பினர் ஏ.எம்.பறக்கத்துள்ளாஹ் எழுதிய முன்னாள் அமைச்சர் மர்ஹூம் ஏ.ஆர்.மன்சூர் பற்றிய ‘ஏ.ஆர்.மன்சூர்; வாழ்வும் பணிகளும்’ நூல் வெளியீடு, கல்முனை உவெஸ்லி உயர்தரப்பாடசாலையின் நல்ல தம்பி மண்டபத்தில், நாளை (12) பிற்பகல் இடம்பெறவுள்ளது.  

திருமதி ஸொஹறா மன்சூர் முன்னிலையில், கல்முனை மாநகர சபை உறுப்பினர் ரஹ்மத் மன்சூர் தலைமையில் நடைபெறவுள்ள இந்த நூல் வெளியீட்டு விழாவில், பிரதம அதிதியாக நகர திட்டமிடல், தேசிய நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவருமான சட்ட முதுமானி றவூப் ஹக்கீம் கலந்துகொள்ளவுள்ளார்.   

பேராதனைப் பல்கலைக்கழக மொழித்துறைத் தலைவர் பேராசிரியர் எம்.ஏ.நுஹ்மான் நூல் ஆய்வுரையை நிகழ்த்தவுள்ளார். தென்கிழக்குப் பல்கலைக்கழக தமிழ் மொழித்துறைத் தலைவர் பேராசிரியர் றமீஸ் அப்துல்லா, நூல் அறிமுகவுரையை நிகழ்த்தவுள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .