2026 மே 16, சனிக்கிழமை

திருக்கோவில் பிரதேச செயலகத்தின் புதிய கணக்காளர் நியமனம்

Mayu   / 2026 ஏப்ரல் 08 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருக்கோவில் பிரதேச செயலகத்தின் புதிய கணக்காளராக எம்.கேந்திரமூர்த்தி நேற்று (07) செவ்வாய்க்கிழமை உத்தியோகபூர்வமாகத் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் முன்னிலையில் இந்த பதவியேற்பு நிகழ்வு இடம்பெற்றது.

புதிய கணக்காளராகப் பொறுப்பேற்றுள்ள எம்.கேந்திரமூர்த்தி, இதற்கு முன்னர் கல்முனை ஆதார வைத்தியசாலையின் கணக்காளராகக் கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பதவியேற்பு நிகழ்வில் ரெட்னம் சுவாகர் - உதவிப் பிரதேச செயலாளர், திருமதி அனோஜா உசாந்த் - உதவித் திட்டமிடல் பணிப்பாளர், எம்.அரசரெத்தினம் - சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர், எம்.பிரதீப் - மேலதிக மாவட்டப் பதிவாளர் மற்றும் பிரதேச செயலகத்தின் ஏனைய உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

வி.ரி. சகாதேவராஜா

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .