2025 ஜூலை 19, சனிக்கிழமை

பூசணிக்காய் தோட்டத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

Editorial   / 2025 ஜூலை 18 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}



பாறுக் ஷிஹான்


அம்பாறை உஹன  கலஹிடியாகொட கிராமத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அம்பாறை  உஹன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கலஹிடியாகொட கிராமத்தில் உள்ள பூசணிக்காய் தோட்டத்தில் பொருத்தப்பட்டிருந்த மின்சார கம்பியில் சிக்கி உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில்  இருந்து தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் கடந்த புதன்கிழமை( 16 )   இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் மின்சாரம் தாக்கிய நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

பின்னர், உஹன பொலிஸ் நிலைய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து  பூசணிக்காய் பயிரிடப்பட்ட நிலத்திற்கு சட்டவிரோதமாக மின்சாரம் இணைத்த நபரை  கைது செய்துள்ளதுடன் இச்சம்பவத்தில் மின்சாரம் தாக்கி இறந்தவர்  கலஹிடியாகொட கிராமத்தைச் சேர்ந்த கெலும் நமல் என்பவராவார்.

மேலும் இச்சம்பவம் தொடர்பில் கிழக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர்  வருண ஜெயசுந்தரவின் உத்தரவின் பேரில்  அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர்  சுஜித் வேத முல்லவின் அறிவுறுத்தலின் பேரில்  அம்பாறை பிரதேச உகன  பதில் உதவி பொலிஸ் அத்தியட்சகர்  இப்னு அசார் தலைமையில் உஹன பொலிஸ்  நிலையப் பொறுப்பதிகாரி   மற்றும் பிற அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X