R.Tharaniya / 2025 நவம்பர் 04 , பி.ப. 03:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
படுக்கையில் இருந்து எழுந்தவுடனும் படுக்கைக்குச் செல்லும் வரையிலும் அலைபேசிகளை பார்க்காத எவருமே இருக்கமாட்டார்கள் என்று தான் கூறவேண்டும்.
அந்தளவுக்கு அலைபேசிகள் மனிதர்களைத் தனது கட்டுக்குள் வைத்து ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கின்றது. முழு உலகையும் விரல் நொடிக்குள் மனிதன் வைத்திருக்கின்றார் என்று பலரும் கூறியிருந்தாலும், குறுகிய காலத்துக்குப் பல தொற்றா நோய்களுக்கு உள்ளாகி விடுகின்றான் என்பதும் உண்மையே.
சமூக வலைத்தளங்களைத் திறந்தால் ஒவ்வொரு நாளும், ஏதோவொரு புது வீடியோக்கள் தரவேற்றப்பட்டிருக்கும். சிலவற்றைப் பார்க்க முடியாது. இன்னும் சில வீடியோக்களும் புகைப்படங்களும் சமூகத்துக்கு ஏதோவொரு கருத்தை மிக ஆழமாக சொல்லியிருக்கும்.
ஒரு படத்தைப் பார்த்தவுடன் உணர்ச்சிவசம் அடையும் நபர்கள் இருக்கிறார்கள் என்பதைப் பலரும் மறந்து விடுகின்றனர். இரத்தத்தால் தோய்ந்த கோரமான காட்சிகளை அப்படியே சமூக வலைத்தளங்களில் தரவேற்றி விடுகின்றனர். தணிக்கை அடிப்படையில், அந்த இரத்தத்தை மறைத்து, செய்திகளுக்கே உரிய வடிவம் கொடுக்கும் ஊடகங்களை இவ்வாறான சமூக ஊடகங்கள் பின் தள்ளி விடுகின்றன.
தற்போதைய காலகட்டத்தில் செய்தி, புகைப்படங்கள் என்பதற்கு அப்பால், வீடியோக்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஒரு செய்தியை தொலைக்காட்சி பார்க்கும், வானொலியில் கேட்கும் ஒருவர், முழு விபரங்களுக்கு
அடுத்த நாள் பத்திரிக்கையை வாங்கிப் படிப்பர். ஆனால், நிலைமை தலைகீழாக மாறி விட்டது.
உலகில் எந்த மூலை முடுக்கில் இடம்பெறும் சம்பவமும், வீடியோவாக அடுத்த நிமிடமே நேரலை செய்யப்படுகிறது. அங்குத் தணிக்கை இல்லை, இதனால், மிகக் கோரமான காட்சிகளைப் பார்க்கும் நபர்கள் எளிதில் உணர்ச்சிவசப்பட்டு விடுகின்றனர். சிலர் நோய்வாய்ப்பட்டு விடுகின்றனர்.
ஒருசிலரின் மனங்களில் இருந்து அந்த கோரமான காட்சிகளை அழிக்கவே
முடியாது போய் விடுகிறது.நாட்டில் வாழும் ஒவ்வொரு குடிமகனும் செய்தியாளராக இருக்கின்றார். ஒவ்வொருவரிடமும் விலையுயர்ந்த, அலைபேசிகள் உள்ளன. பொது இடங்களில் ஒருவருக்கு ஒருவர் முகம் பார்த்துக்கொள்வதே இல்லை. அந்தளவுக்கு அலைபேசிகளில் மூழ்கிக் கிடப்பார்கள்.
ஒருவரை ஒருவர் முகம் பார்த்துச் சிரிப்பதற்குக் கூட பலருக்கும் நேரமில்லை. இதனால், பெரும்பாலானவர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர். நீண்ட நேரம் அலைபேசியிலும் அதன் வெளிச்சத்தைப் பார்த்துக் கொண்டிருப்பவர்கள் நோய்வாய்ப்பட்டு விடுகின்றனர்.
அன்றாட வாழ்க்கையின் சவால்களை மிகவும் திறம்பட எதிர்கொள்ளவும், தன்னைச் சுற்றியுள்ள பிரச்சினைகளைத் தீர்க்க வாழ்க்கை திறன்களை வளர்த்துக்கொள்ளவும் பராமரிக்கவும், உலகத்தை மட்டுமல்ல, தன்னையும் சுய புரிதலில் புரிந்து கொள்ளவும், நல்ல தனிப்பட்ட உறவுகளைப் பராமரிக்கவும் வேண்டும்.
உணர்ச்சிக் கொந்தளிப்பை எதிர்கொள்ளவும் நிர்வகிக்கவும், மன அழுத்தத்தை எதிர்கொள்ள ஓர் ஆளுமையை வளர்க்கவும், சமூக விழுமியங்களைப் போற்றுபவராக இருக்கவும், உறவுகளை நிர்வகிக்கவும், அமைதியான வாழ்க்கையை நடத்தவும் ஒரு நபர் வளர்த்துக் கொள்ளும் பழக்கம் மற்றும் உந்துதல்,
அனைத்தும் ஓர் உற்பத்தி வாழ்க்கைத் தத்துவத்தின் மூலம் ஒரு நபர் நல்ல மன ஆரோக்கியத்தைப் பராமரிக்க வேண்டும். இல்லையேல், மன உளைச்சலுக்கு உள்ளாவோர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்லும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
6 minute ago
12 minute ago
30 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
12 minute ago
30 minute ago
1 hours ago