2021 ஜூன் 21, திங்கட்கிழமை

ஐஸ்லாந்திலுள்ள எரிமலை புகையினால் விமான போக்குவரத்துகள் ரத்து

Super User   / 2010 ஏப்ரல் 15 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐஸ்லாந்திலுள்ள எரிமலையினால் கக்கப்பட்ட சாம்பல்ப்புகை காரணமாக பிரிட்டன், அயர்லாந்து  மற்றும் நோர்டிக் நாடுகளின் விமான போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, பல்லாயிரக்கணக்கனோர்  விமான நிலையங்களில் காத்திருப்பதாக செய்திகள் குறிப்பிடுகின்றன.

இந்த நிலைமை எப்போது வழமைக்கு திரும்பும் என்று அதிகாரிகள் கூற மறுத்துள்ளனர் என்று இணையதள செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும், அயர்லாந்து எட்டு மணிநேரம் தனது வான் பரப்பை மூடி வைத்துள்ளது. அத்துடன், டென்மார்க், நோர்வே, சுவீடன் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளும் தமது  வான் பரப்புக்களை மூடி வைத்திருக்கும் அதேவேளை, பிரிட்டனில் ஹீத்ரு விமான நிலையம் உட்பட ஐந்து சர்வதேச விமான நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.

ஐஸ்லாந்தில் எரிமலை கக்கல் காரணமாக   இடம்பெயர்ந்துள்ளனர்.இWத நிலைமை தொடர்ந்தும் ஓரிரு வாரங்களுக்கு நீடிக்கும் என தெவிக்கப்படுகிறது.
 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .