2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

பாகிஸ்தான் குண்டுத் தாக்குதலில் 28 பேர் பலி:218 பேர் காயம்

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 02 , மு.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானில் இடம்பெற்ற வெவ்வேறு  தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் 28 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன், 218 பேர் காயமடைந்துள்ளனர்.


இந்தக் குண்டுத் தாக்குதலிகளில் காயமடைந்தவர்களில் 35 பேர் படுகாயத்திற்குள்ளாகியுள்ளனர்.

பாகிஸ்தானின் லாகூர் நகரிலேயே  நேற்று புதன்கிழமை மூன்று தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

முதலாவது குண்டுத் தாக்குதல் இடம்பெற்று மூன்று அல்லது நிமிடங்களின் பின்னர் இரண்டாவது குண்டுத் தாக்குதல் இடம்பெற்றதுடன், இதனையடுத்து மூன்றாவது குண்டுத் தாக்குதல் 25 நிமிடங்களின் பின்னர் இடம்பெற்றதாகவும் லாகூர் பொலிஸார் குறிப்பிட்டனர்.

முதலாவது தற்கொலைக் குண்டுத் தாக்குதலை பொலிஸார் தடுத்து நிறுத்த முற்பட்டபோதிலும், தற்கொலைதாரி குண்டை வெடிக்க வைத்ததாகவும் பொலிஸார் கூறினர்.  

இந்நிலையில், துண்டிக்கப்பட்ட இரண்டு தலைகளையும் துண்டிக்கப்பட்ட ஒரு உடலையும் தாம் அடையாளம் கண்டிருப்பதாகவும்  பொலிஸார் தெரிவித்தனர்.

 
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .