2022 ஓகஸ்ட் 11, வியாழக்கிழமை

இனிமேல் தண்டவாளத்தில் பஸ்

Ilango Bharathy   / 2021 டிசெம்பர் 25 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

தண்டவாளத்திலும், வீதியிலும் இயங்கக்கூடிய வாகனமொன்று ஜப்பானில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பார்ப்பதற்கு மினி பஸ்போன்று  வடிவமைக்கப்பட்டுள்ள இவ்வாகனமானது வீதியில் செல்லும் போது றப்பர் டயரிலும், தண்டவாளத்தில் செல்லும்போது இரும்பு சக்கரங்களிலும் செல்லக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் இதில்  21 பேர் வரை பயணிக்க முடியும் எனவும்,  100 கிலோ மீற்றர் வேகத்தில் இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

 இந்நிலையில் இப்பஸ்ஸானது  ஜப்பானிலுள்ள டோகுஷிமா என்னும் மாநிலத்தில் நாளையிலிருந்து பயன்பாட்டிற்கு வரவுள்ளது  என்பதும் குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .