2025 டிசெம்பர் 07, ஞாயிற்றுக்கிழமை

உலகின் மிக உயரமான ஹோட்டல் திறப்பு

Editorial   / 2025 டிசெம்பர் 07 , மு.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகின் மிக உயரமான ஹோட்டல் துபாயில் திறக்கப்பட்டுள்ளது. இந்த ஹோட்டல் வானளாவிய உயரத்துக்கு கட்ட திட்டமிடப்படவில்லை என்றும், தற்செயலாக நடந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாய் நகரில், கடற்கரையோரம், 1,237 அடி உயரத்தில், 40,000 சதுரடியில், 'சீல் டவர்' என்ற பெயரில் வானுயர ஹோட்டல் ஒன்றை, 'இம்மோ பிரஸ்டீஜ் லிமிடெட்' என்ற நிறுவனம் திறந்துள்ளது.

கண்ணாடி மாளிகை இந்த ஹோட்டலை, 'தி பர்ஸ்ட் குரூப்' என்ற கட்டுமான நிறுவனம் கட்டி கொடுத்துள்ளது. கண்ணாடி மாளிகையாக ஜொலிக்கும் இந்த ஹோட்டலில், மொத்தம் 82 தளங்கள், 1,004 அறைகள் உள்ளன.

''இந்த ஹோட்டல் இவ்வளவு உயரத்தில் கட்ட முதலில் தீர்மானிக்கப்படனில்லை.

''வரைபடங்கள் திருத்தப்பட்டு மாற்றியமைக்கப்பட்டபோது இதன் உயரம் எதிர்பாராதவிதமாக அதிகரிக்கப்பட்டது,'' என, 'தி பர்ஸ்ட் குரூப்'பின் தலைமை செயல் அதிகாரி ராப் பர்ன்ஸ் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், ''நாங்கள் கண்கவர் கட்டடம் ஒன்றை கட்ட விரும்பினோம். அதற்காக ஒவ்வொரு வசதிகளாக சேர்த்து கொண்டே சென்றோம்.

''இறுதியில், அது உலகின் மிக உயரமான கட்டடமாக மாறியது. உலகின் மிக உயர ஹோட்டலை கட்ட வேண்டும் என, நாங்கள் நிச்சயமாக திட்டமிடவில்லை. இது எதிர்பாராதவிதமாக நடந்தது,'' என்றனர்.

ஹோட்டல் உச்சியில் உள்ள, 'ஸ்கை லவுஞ்ச்' எனப்படும் ஓய்விடம் மற்றும் பிற உயரமான தளங்களில் இருந்து துபாய் கடற்கரை, பாம் ஜுமேரா மற்றும் வளைகுடாவின் 360 டிகிரி முழுமையான காட்சியை பார்க்க முடியும்.

மேலும், 76வது தளத்தில் காற்றை செலுத்தும் வெற்றிடத்துக்குள் அமைக்கப்பட்டுள்ள நீச்சல் குளத்தில் உள்ள தண்ணீர், வானத்தில் மறைவது போல இருக்கும்.

பாரம்பரியம் செங்குத்தான பூங்காக்கள் உள்ளிட்ட சிறப்பம்சங்களுடன், மேல் தளத்தில் பிரிட்டனை தளமாகக் கொண்ட, 'டட்டு பிராண்டு' உட்பட மொத்தம் எட்டு உ ணவகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஹோட்டல், பிரமாண்ட கட்டடங்களை விரும்பும் துபாயின் பாரம்பரியத்துக்கு ஏற்ப கட்டப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X