2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

“சாதிக்க வயதில்லை”: நிரூபித்துக் காட்டிய 60 வயது விவசாயி

Editorial   / 2025 ஜூலை 20 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய சீனாவின் அன்ஹுய் மாகாணத்தில் ஹன்ஷான் கவுண்டியைச் சேர்ந்த 60 வயதான விவசாயி ஜாங் ஷெங்வு, எந்த பொறியியல் பட்டமும், வரைபட வழிகாட்டுதலும் இல்லாமல், தனது கனவுகளை நோக்கி பயணித்தவர்.

சிறுவயதிலிருந்து படகுகளை விரும்பிய ஜாங், 2014ல் டிவி ஒளிபரப்பிய நீர்மூழ்கிக் கப்பல் நிகழ்ச்சியிலிருந்து உத்வேகம் கொண்டு , தன்னிச்சையாக ஒரு நீர்மூழ்கிக் கப்பலை வடிவமைக்க தீர்மானித்தார். தனது மனைவி இல்லாத நேரத்தில் ரகசியமாக கட்டுமானத்தைத் தொடங்கி, 5,000 யுவானுக்கு தேவையான பொருட்களை வாங்கி முதலாவது முன்மாதிரியை உருவாக்கினார்.

6 மீட்டர் நீளமும், 2 டன் எடையும் கொண்ட அந்தக் கப்பல் 1 மீட்டர் ஆழத்தில் மூழ்கக்கூடியது. பயத்துடனும் உற்சாகத்துடனும் அதில் முதன்முறையாக மூழ்கினார் ஜாங்.

அந்த முயற்சியுக்குப் பிறகு, அவருக்கு சீன அரசால் பயன்பாட்டு காப்புரிமை வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, ‘பிக் பிளாக் ஃபிஷ்’ எனப் பெயரிடப்பட்ட 7 மீட்டர் நீளமுள்ள, 5 டன் எடையுடைய இரண்டாவது நீர்மூழ்கிக் கப்பலையும் உருவாக்கினார். இது 8 மீட்டர் ஆழத்தில் மூழ்கும் திறன் கொண்டதாகவும், இருவரும் பயணிக்கக்கூடியதாகவும், மேம்பட்ட கட்டுப்பாடுகளுடன் சிறந்த வடிவமைப்பில் அமைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜாங் உருவாக்கிய நீர்மூழ்கிக் கப்பல் தொடர்பான வீடியோ, டிக்டோக்கின் சீன பதிப்பு டூயினில் பதிவேற்றப்பட்டதும் வைரலாக பரவியது.

இது ஒரு மீனவருக்குக் கிடைக்காத வலையை கண்டுபிடிக்க உதவி செய்ததோடு, ஜாங்க்கு 3,000 யுவான் வருமானமும் வழங்கியது. அவரது முயற்சி இன்னும் நிபுணர்களால் சோதிக்கப்படவில்லை என்றாலும், பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

“எனக்குப் பெரிய விசயங்கள்  தெரியாது. ஆனாலும், மக்கள் கனவுகளுக்காக ஏதாவது செய்யவேண்டும் என்று நம்புகிறேன்,” என்ற ஜாஙின் வார்த்தைகள் பலரின் மனங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X