2022 ஓகஸ்ட் 11, வியாழக்கிழமை

35 ஆண்டுகளாக வயிற்றில் குழந்தையை சுமந்த மூதாட்டி

Ilango Bharathy   / 2022 ஜனவரி 03 , பி.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

73 வயதான மூதாட்டியொருவர் கடந்த 35 வருடங்களாக வயிற்றில்  குழந்தையொன்றை சுமந்து வந்த சம்வம் அல்ஜிரியாவில்  இடம்பெற்றுள்ளது.

அல்ஜீரியாவின் ஸ்கிக்டா பகுதியைச் சேர்ந்த குறித்த மூதாட்டி  அண்மையில் கடும் வயிற்று வலி காரணமாக வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டார்.

இதன் போது அவரது வயிற்றை  பரிசோதித்த வைத்தியர்கள் அவரது வயிற்றில் 3 கிலோகிராம்  நிறை  கொண்ட 7 மாதங்களான கல் குழந்தையொன்றைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மேலும் இக்குழந்தையானது கடந்த 35 ஆண்டுகளாக அவரது வயிற்றில் இருந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து அவரது வயிற்றில் இருந்து குறித்த குழந்தையை மருத்துவர்கள் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து அகற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்துக் கருத்துத் தெரிவித்த வைத்தியர்கள் ” இந்நோயானது லித்தோபீடியன் என அழைக்கப்படுவதாகவும், கருவானது  கருப்பையில் வளராமல் அடிவயிற்றில் வளர்வதால்  குழந்தைக்கு இரத்த ஓட்டம் செல்லாமல் கரு வெளியேற வழியில்லாமல் அங்கேயே தங்கிவிடுவதால் இந்நிலைமை ஏற்படுவதாகவும்  தெரிவித்துள்ளனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .