R.Tharaniya / 2025 நவம்பர் 03 , மு.ப. 10:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடமேல் மாகாண ஷட்டோகன் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில், புத்தளத்தை சேர்ந்த மாணவர்கள் அதிகமான பதக்கங்களை பெற்று சிறப்பான சாதனை புரிந்துள்ளனர்.
மாகாண மட்டத்திலான இந்த போட்டிகள் வென்னப்புவ சேர் அல்பட் பீரிஸ் உள்ளக விளையாட்டு அரங்கில் சனிக்கிழமை (01) அன்று இடம்பெற்றது.
இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள், வரவிருக்கும் தேசிய மட்டப் போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர்.
தேசிய மட்ட போட்டிகள் இம்மாதம் 23ஆம் திகதி கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. மாகாண மட்டத்தில் வெற்றி பெற்ற மாணவர்கள் வாஷி ஷோட்டோகன் கராத்தேடோ அசோசியேஷன் (WSKA) அணியினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இம்மாணவர்களுக்கு அதன் பிரதான போதனாசிரியர் எம்.பைரோஸ் பயிற்சி அளித்துள்ளார்.
பதக்கங்களை அள்ளி குவித்து வெற்றி பெற்ற மாணவர்கள், எஸ்.டி.எம். அல்தாப், எம்.எஸ். சாப்ரின், எஸ்.எப். லுலு, எம்.ஆர்.எப். அம்னா, எம்.ஆர்.எப். அமனா, என்.எம். ஹைக்கா, சபியூர் ரஹ்மான், ஆர்.எம். அன்சாப், எம்.எஸ். ஆப்ரான், எம்.சஹ்ரான், ஜே. ஐமான், எம்.இனாப், ஏ.ஆஷிப், சுஹாத், நாஸிம், சையான்,எச்.பன்னா ஆகியோர்.



12 minute ago
27 minute ago
49 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
27 minute ago
49 minute ago
1 hours ago