2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

வடக்கு கல்வி வலயமட்ட விளையாட்டுப் போட்டிகள் 21 ஆம் திகதி ஆரம்பம்

Kogilavani   / 2012 மார்ச் 17 , மு.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(நவரத்தினம்)

வவுனியா வடக்கு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கான விளையாட்டுப்போட்டிகள் எதிர்வரும் 21 ஆம் திகதி புளியங்குளம் இந்துக்கல்லூரி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

மீள்குடியேற்ற பிரதேசத்தை பாரியளவில் உள்ளடக்கிய இவ் வலயத்தில் நீண்ட காலத்தின் பின்னர் அனைத்து பாடசாலை மாணவர்களும் பங்கு கொள்ளும் வகையில் வலய மட்டப்போட்டிகள் இடம்பெறவுள்ளன.

யுத்தகாலத்தில் இவ் வலயத்தின் ஒரு பகுதி இராணுவப்பகுதியாக காணப்பட்டமையினால் ஏனைய பாடசாலைகளுடன் இணைந்த விளையாட்டு நிகழ்வுகளில் பங்கு கொள்ள முடியாத நிலையில் காணப்பட்டது.

எனினும் இம்முறை சிறப்பாக இடம்பெறவுள்ள இவ்வலய மட்டப்போட்டிகள் 21 ஆம் திகதி ஆரம்பமாகி 24 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X