-கு.சுரேன்
மானிப்பாய் பரிஸ் விளையாட்டுக்கழகம் பாலகிருஸ்ணன் ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணத்திற்காக யாழ். மாவட்ட துடுப்பாட்டக் கழகங்களுக்கிடையில் இருபது – 20 துடுப்பாட்டச் சுற்றுப் போட்டியினை மானிப்பாய் இந்து கல்லூரி மைதானத்தில் நடத்தி வருகின்றது.
தெல்லிப்பளை யூனியன் விளையாட்டுக்கழக அணிக்கும் ஸ்ரான்லி விளையாட்டுக்கழக அணிக்கும் இடையில் நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்ரான்லி விளையாட்டுக்கழகம் 15 பந்து பரிமாற்றங்களில் 73 ஓட்டங்களுக்குச் சகல இலக்குகளையும் இழந்தது. பதிலளித்தாடிய யூனியன் அணி 4.3 பந்துபரிமாற்றங்களில் இலக்கு நஸ்டம் இன்றி வெற்றியிலக்கை அடைந்தது.
ஜொனியன்ஸ் விளையாட்டுக்கழக அணிக்கும் விக்டோரிய அணிக்கும் இடையில் நடைபெற்ற போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய ஜொனியன்ஸ் அணி 20 பந்துபரிமாற்றங்களில் 3 இலக்குகளை இழந்து 160 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. பதிலளித்தாடிய விக்டோரிய அணி 16.4 பந்துபரிமாற்றங்களில் 4 இலக்குகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக கணேஸ் 63 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
ஜொலிஸ்டார்ஸ் அணிக்கும் வட்டுக்கோட்டை ஓல்ட்கோல்ட் அணிக்கும் இடையில் நடைபெற்ற போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய ஜொலிஸ்டார்ஸ் அணி 20 பந்துபரிமாற்றங்களில் 4 இலக்குகளை இழந்து 191 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் மணிவண்ணன் 77 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். பதிலளித்தாடிய ஓல்ட்கோல்ட் அணி, 18.2 பந்துபரிமாற்றங்களில் 3 இலக்குகளை இழந்து மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில் திலீபன் 64, குகன் 54 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.