2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

இலங்கை துடுப்பாட்டச் சங்கத்தின் பிரிவு - 3 போட்டிகள்

Menaka Mookandi   / 2013 ஓகஸ்ட் 15 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கு.சுரேன்

இலங்கை துடுப்பாட்டச் சங்கத்தின் ஏற்பாட்டில் பிரிவு 3 அணிகளுக்கிடையில் நடைபெற்று வரும் 50 பந்துப் பரிமாற்றங்கள் கொண்ட துடுப்பாட்டச் சுற்றுப் போட்டியில், யாழ். மாவட்ட துடுப்பாட்டச் சங்கத்தினால் யாழ். மாவட்டத்திலுள்ள துடுப்பாட்ட கழகங்களுக்கு இடையில் நடத்தப்படும் போட்டிகளில் எதிர்வரும் தினங்களில் நடைபெற்று விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறவுள்ள போட்டியில் திருநெல்வேலி சி.சி அணியினை எதிர்த்து அரியாலை ஜக்கிய அணியும், 20ஆம் திகதி நடைபெறவுள்ள போட்;டியில் ஜொலிஸ்ரார்ஸ் அணியினை எதிர்த்து பற்றீசியன் அணியும், 24ஆம் திகதி நடைபெறவுள்ள போட்டியில் சென்றலைட்ஸ் அணியினை எதிர்த்து யூனியன்ஸ் அணியும் மோதவுள்ளன.

அனைத்துப்போட்டிகளும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி பிக்னெல் மைதானத்தில் நடைபெறும் என யாழ்.மாவட்ட துடுப்பாட்டச் சங்கச் செயலாளர் எஸ்.விமலதாஸன் தெரிவித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X