2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

15 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான கிரிக்கெட் சுற்றுப்போட்டி

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 10 , மு.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்

இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கம் 15 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான சுற்றுப்போட்டியினை நடத்தி வருகின்றது.

3 கட்டங்களாக இப்போட்டி நடத்தப்படுகின்றது. முதலாவது கட்டம் மாவட்ட மட்டத்திலும் இரண்டாவது கட்டம் மாவட்டங்களுக்கு இடையிலும் மூன்றாவது கட்டம் தேசிய ரீதியிலும் நடத்தப்படுகின்றன.

முதல் இரு கட்டங்கள் லீக் முறையிலும் மூன்றாம் கட்டம் விலகல் முறையிலும் இச்சுற்றுப்போட்டி நடத்தப்படுகின்றது.
திருகோணமலை ஸ்ரீகோணேஸ்வரா இந்துக் கல்லூரி  அணி மூன்றாம் கட்டத்திற்கு தெரிவாகி உள்ளது. நாளை புதன்கிழமை வடமத்திய மாகாணம் பொலன்னறுவை  மாவட்டத்தைச் சேர்ந்த மெதிரிகிரிய மத்திய கல்லூரியுடன் இப்போட்டியில் பங்குகொள்ள உள்ளது.

இப்போட்டி ஸ்ரீகோணேஸ்வரா இந்துக் கல்லூரி மைதானத்தில் நடத்தப்பட உள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X