2025 ஜூலை 21, திங்கட்கிழமை

கொழும்பு ஆனந்தா சம்பியன்

Menaka Mookandi   / 2011 மே 13 , பி.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

கொழும்பு ஆனந்தா கல்லூரிக்கும் கண்டி புனித சில்வெஸ்தர் கல்லூரிக்கும் இடையில் இன்று மாலை இடம்பெற்ற பாடசாலைகளுக்கிடையிலான றகர் போட்டியில் கொழும்பு ஆனந்தா கல்லூரி 43 - 27 என்ற புள்ளி வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கண்டி, போகம்பறை மைதானத்தில் இன்று மாலை இடம்பெற்ற இப்போட்டியில் முதற் பகுதியில் 19 - 10 என்ற புள்ளி வித்தியாசத்தில் ஆனந்தா கல்லூரி முன்னிலை வகித்தது.

இரண்டாம் பகுதி ஆரம்பத்தில் கண்டி புனித சில்வெஸ்தர் கல்லூரி திறமையாக விளையாடிய போதும் ஆனந்தா கல்லூரியின் வீரர்களுக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. போட்டி முடிவில் 43 - 27 என்ற புள்ளி வித்தியாசத்தில் ஆனந்தா கல்லூரி வெற்றிபெற்றது.

ஆனந்தா கல்லூரி சார்பில் சமிர அக்கரவிட, ஜனித தொடம்வல, சமிக சரனங்கர, ரொஷான் ரன்திம, அசல சங்ஜய, அஷான் ஜயசங்க ஆகிய வீரர்கள் புள்ளிகளை பெற்றுக் கொடுத்ததுடன் சில்வெஸ்தர் கல்லூரி சார்பில் லஸித அத்தனகொட, சம்பக திஸானாயக்க, அமல் வீரகோன், பீ.அரவிந்த ஆகியோர் புள்ளிகளை பெற்றுக்கொடுத்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X