Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 மே 18 , மு.ப. 06:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கே.எஸ்.வதனகுமார்)
தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் இளைஞர் விவகார அமைச்சும் இணைந்து நடாத்தும் 23ஆவது இளைஞர் விளையாட்டு விழாவின் வவுணதீவு பிரதேச விளையாட்டு விழா இளைஞர் சேவை அதிகாரி மா.சசிகுமாரின் ஏற்பாட்டில் வவுணதீவு பிரதேச செயலாளர் என்.வில்வரத்னம் தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
இந்த இளைஞர் விளையாட்டு விழாவில் மகிழவெட்டவான் நியூ ஸ்டார் இளைஞர் கழகம் 214 புள்ளிகளை பெற்று முதலாம் இடத்தினையும் 128 புள்ளிகளைப் பெற்ற நாவற்காடு பாரத் இளைஞர் கழகம் இரண்டாம் இடத்தினையும் 93 புள்ளிகளைப் பெற்ற கன்னன்குடா கண்ணகி இளைஞர் கழகம் மூன்றாமிடத்தினையும் பெற்றது.
நாவற்காடு பாரத் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற இவ்விழாவில் பிரதம விருந்தினராக வவுணதீவு பிரதேச சபைத் தவிசாளர் கா.சுப்பிரமணியம் கலந்துகொண்டதுடன் சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி ஜே.கலாராணி, கோட்டக் கல்வி பணிப்பாளர் சு.முருகேசப்பிள்ளை, வவுணதீவுப் பிரதேச சபை எதிர்க்கட்சித் தலைவர் க.விமலநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago