Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 மே 25 , பி.ப. 05:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஏ.எச்.எம்.பௌஸான்)
மல்வானை அல் முபாரக் தேசிய கல்லூரியின் பழைய மாணவர்களான Team twenty two குழுவினர் ஏற்பாடு செய்திருந்த மல்வானை பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் விக்டோரியா ரேன்ஜர்ஸ் அணி சாம்பியனாகியது.
விக்டோரியா ரேன்ஜர்ஸ் (Victoria Rangers) மற்றும் டேர்மினேடர்ஸ் (Terminators) ஆகிய அணிகள் இறுதிப் போட்டியில் மோதின.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற விக்டோரியா ரேன்ஜர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 10 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 55 ஓட்டங்களை பெற்றது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய டேர்மினேட்டர்ஸ் அணி 9.2 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 45 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
போட்டியின் சிறப்பாட்டக்காரர் மற்றும் ஆட்ட நாயகன் விருதுகளை முறையே விக்டோரியா ரேன்ஜர்ஸ் அணியின் மொஹமட் இர்பான் மற்றும் மொஹமட் அரபாத் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
இந்த பிரீமியர் லீக் கிரிக்கெட் சுற்றுப்போட்டி தொடரின் இறுதிப் போட்டியில் அனர்த்த நிவாரண சேவைகள் பிரதி அமைச்சர் துலிப் விஜேசேகர, நாடாளுமன்ற உறுப்பினர் ருவான் விஜேவர்தன, நுவரெலியா மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.ஏ. கபூர், மேல் மாகாண சபை உறுப் பினர் குணசிரி ஜெயனாத் மற்றும் பியகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சாந்த திலகரட்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.
28 minute ago
2 hours ago
ARAFATH Thursday, 26 May 2011 02:29 PM
அலி ஹாஜி எலகிரி. யு ஆர் த சாம்பியன்
Reply : 0 0
“Insha Allah” Thursday, 26 May 2011 06:20 PM
நல்ல விடயங்களுக்கு அனைவரும் முன்வந்தால் சாதிக்கலாம் .
பாயும் புலி
Reply : 0 0
mohamed asir qatar Friday, 27 May 2011 12:10 AM
வாழ்த்துக்கள் !இதே போன்ற போட்டியால் நிறைய இளைஞர்கள் முன்வர வாய்ப்புக்கள் உள்ளன. இன்ஷால்லாஹ் எதிர் வரும் காலங்களில் இதை விட சிறப்ப பா நடாத்த என்னுடைய வாழ்த்துக்கள்.
Reply : 0 0
M.L.M.Saheed Friday, 27 May 2011 12:42 AM
எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.....
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
2 hours ago