2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

எல்லே போட்டியில் தெல்லிப்பளை பிரதேச செயலக அணிக்கு சம்பியன்

Suganthini Ratnam   / 2011 மே 30 , மு.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

யாழ். மாவட்ட பிரதேச செயலகங்கள் மற்றும் உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளுக்கு இடையே நடத்தப்பட்ட ஆண்களுக்கான எல்லே போட்டியில் யாழ். மாவட்ட சம்பியனாக தெல்லிப்பளை பிரதேச செயலக அணி தெரிவு செய்யப்பட்டது.

வடமாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் ஆதரவுடன், யாழ். மாவட்ட செயலக விளையாட்டுப் பிரிவு இப்போட்டியை நடத்தியது.

யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் நல்லூர் பிரதேச செயலக அணியும் தெல்லிப்பளை பிரதேச செயலக அணியும் மோதிக்கொண்டன. முதலில் விளையாடிய நல்லூர் பிரதேச செயலக அணி, தெல்லிப்பளை பிரதேச செயலக அணியின் கடுமையான களத்தடுப்பினால் ஓட்டம் எதனையும் பெறாத நிலையில் அனைவரும் ஆட்டமிழந்தனர்.

நல்லூர் பிரதேச செயலக அணி ஓட்டம் எதனையும் பெறாத நிலையில் தெல்லிப்பளை பிரதேச செயலக அணி தனது முதலாது இனிங்ஸ்சில் விளையாடினார்கள். நல்லூர் பிரதேச செயலக அணி பல பிடிகளை விட்ட நிலையில் 14 பேர் ஆட்டமிழந்த நிலையில் 11 ஓட்டங்களை பெற்று தெல்லிப்பளை பிரதேச செயலக அணி தனது விளையாட்டை நிறுத்திக்கொண்டது.

இரண்டாவது இனிங்சில் விளையாடிய நல்லூர் பிரதேச செயலக அணி மீண்டும் தெல்லிப்பளை பிரதேச செயலக அணியின் களத்தடுப்பினால் ஓட்டம் எதனையும் பெற முடியாத நிலையில் அனைவரும் ஆட்டமிழந்தனர். தெல்லிப்பளை பிரதேச செயலக அணி 11க்கு 00 என்ற புள்ளிகள் அடிப்படையில் நல்லூர் பிரதேச செயலக அணியை வெற்றி பெற்று யாழ். மாவட்ட சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X