Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2011 மே 30 , மு.ப. 05:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எஸ்.குமார்)
திருகோணமலை வேல்ஸ் விளையாட்டுக்கழகம் நடத்திவரும் இருபதுக்கு இருபது கொண்ட கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் முதல் நாள் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் வேல்ஸ் கழகத்தை எதிர்த்துப் போட்டியிட்ட ஒலிம்பிக்ஸ் கழகம் 91 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய ஒலிம்பிக்ஸ் கழகம் 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட் இழப்பிற்கு 182 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. இவ்வணியில் ரொகான் 43 பந்துகளுக்கு 65 ஓட்டங்களைப் பெற்று கொண்டார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய வேல்ஸ் கழகம் 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட் இழப்பிற்கு 91 ஓட்டங்களை மட்டும் பெற்றுக் கொண்டது.
இரண்டாவது போட்டியில் வேல்ஸ் கழகம் ஸ்பென்ஸ் கழகத்தை எதிர்த்து போட்டியிட்டது. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்பென்ஸ் கழகம் 6 விக்கட் இழப்பிற்கு 174 ஓட்டங்களைப் பெற்றது. இவ்வணிக்காக வி.நிசாந்தன் 30 பந்துகளுக்கு முகம் கொடுத்து 43 ஓட்டங்களைப் பெற்று கொடுத்தார். சி.பிரதீபன் 4 ஓவர்கள் பந்துவீசி 31 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுக்களை பெற்றுக் கொண்டார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய வேல்ஸ் அணியினர் 9 விக்கட் இழப்பிற்கு 128 ஓட்டங்களைப் பெற்றனர். இவ்வணியில் ச.நிசங்கன் 30 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். றிச்சர்ட் 4 ஓவர்கள் பந்துவீசி 20 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுக்களைப் பெற்றுக் கொடுத்தார். இதன் மூலம் ஸ்பென்ஸ் அணியினர் 46 ஓட்டங்களால் வெற்றி பெற்றனர்.
4 hours ago
4 hours ago
19 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
19 Jul 2025