2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

சர்வதேச கூட்டுறவாளர் தினத்தையொட்டி விளையாட்டுப் போட்டிகள்

Suganthini Ratnam   / 2011 ஜூன் 01 , மு.ப. 03:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(தாஸ்)

வடமாகாண மட்ட கூட்டுறவுதினப் போட்டிகளில் யாழ்.  மாவட்டம் முதலாம் இடத்தைப் பெற்று மாகாண மட்ட சம்பியனாகியுள்ளது.
89ஆவது சர்வதேச கூட்டுறவாளர் தினத்தை முன்னிட்டு வடக்கு மாகாண மட்டத்தில் 5 மாவட்டங்களிடையே நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகள் யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் அண்மையில் நடைபெற்றது.

இப்போட்டியில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், வவுனியா மாவட்டங்களைச் சேர்ந்த அணிகள் கலந்துகொண்டன.

யாழ். மாவட்டம் 115 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தையும் முல்லைத்தீவு மாவட்டம் 95 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தையும் வவுனியா மாவட்டம் 76 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தையும் மன்னார் மாவட்டம் 43 புள்ளிகளைப் பெற்று நான்காம் இடத்தையும் கிளிநொச்சி மாவட்டம் 11 புள்ளிகளைப் பெற்று ஐந்தாம் இடத்தையும் பெற்றுக்கொண்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X