2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

யாழில் முதல்த் தடவையாக முக்கோண வெற்றிக்கிண்ண கிரிக்கெட் போட்டி

Suganthini Ratnam   / 2011 ஜூன் 03 , மு.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

யாழ். மாவட்டத்தில் முதல்த் தடவையாக முக்கோண வெற்றிக்கிண்ணத்திற்கான  அணிகள் பங்குபற்றும் 50 ஓவர்களுக்கு மட்டுப்படுத்திய கிரிக்கெட் போட்டி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ளது.

யாழ்ப்பாணம்  மத்திய விளையாட்டுக்கழகம் நடத்தவுள்ள இந்தப் போட்டியில் கடந்தாண்டில் ஜோர்ஜ் வெப்சர் வெற்றிக்கிண்ணத்திற்காக நடத்தப்பட்ட போட்டியில் தெரிவுசெய்யப்பட்ட முதல் மூன்று கழகங்களும் மோதவுள்ளன.

கடந்தாண்டு இந்தப் போட்டித் தொடரில் சிறந்த  முதல் மூன்று கழங்கங்களாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக விளையாட்டுக்கழகம், ஜொலிஸ்ரர் விளையாட்டுக்கழகம், யாழ். சென்ரலி விளையாட்டுக்கழகம் தெரிவுசெய்யப்பட்டிருந்தன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X