2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

ரகர் போட்டியில் கொழும்பு ரோயல் கல்லூரி வெற்றி

Kogilavani   / 2011 ஜூன் 05 , மு.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

கொழும்பு ரோயல் கல்லூரிக்கும் கண்டி புனித அந்தோனியார் கல்லூரிக்கும் இடையில் இடம்பெற்ற பாடசாலைகளுக்கிடையிலான ரகர் போட்டியில் 40: 13 என்ற புள்ளி வித்தியாசத்தில் கொழும்பு ரோயல் கல்லூரி வெற்றிபெற்றது.

கண்டி நித்தவெல ரகர் மைதானத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற இப்போட்டியின் முதல் பகுதியில் 28-03 என்ற புள்ளி வித்தியாசத்தில் கொழும்பு ரோயல் கல்லூரி முன்னிலை வகித்தது.

போட்டியின் இரண்டாம் பகுதியில் ரோயல் கல்லூரி அணி ஐந்து கோல்கள், ட்ரை உள்ளடங்களாக மேலும் 12 புள்ளிகளை பெற்றுகொண்டது.

கண்டி புனித அந்தோனியார் கல்லூரி ஒரு ட்ரை மற்றும் இரண்டு பெனல்ட்டிகளும் உள்ளடங்களாக 13 புள்ளிகளை மட்டுமே பெற்றுகொண்டது.

கொழும்பு ரோயல் கல்லூரி சார்பில்  சிஹான் பதிரன அஞ்ஜன குடாஹெட்டி, தேமிய ரத்வத்த, வசீம் பாவா, இஜாஸ் போரான், அர்ஷாட் ஜமால்தீன் ஆகிய வீரர்களும் புனித அந்தோனியர் கல்லூரி சார்பில் சாமர குமார, சஜித் லஹீர் ஆகிய வீரர்களும் புள்ளிகளை பெற்றுகொடுத்தனர்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X