2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

பாடசாலைகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டியில் அஸ்ஹர் தேசிய கல்லூரி வெற்றி

Kogilavani   / 2011 ஜூன் 05 , மு.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

அக்குறணை அஸ்ஹர் தேசிய பாடசாலைக்கும் கண்டி கிங்ஸ்வுட் கல்லூரிக்கும் இடையில் இடம்பெற்ற பாடசாலைகளுக்கிடையிலான 15 வயதுக்குட்பட்ட கிரிகட் போட்டியில் அக்குறணை அஸ்ஹர் தேசிய கல்லூரி 6 விக்கட்டுகளால் வெற்றி பெற்றது.

அக்குறணை அஸ்ஹர் தேசிய கல்லூரி மைதானத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கிங்ஸ்வுட் கல்லூரி 40 ஓவர்கள் முடிவில் நான்கு விக்கட்டுகளை இழந்து 210 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அக்குறணை அஸ்ஹர் கல்லூரி 36.1 ஓவர்களில் நான்கு விக்கட்டுகளை இழந்து 211 ஓட்டங்களை பெற்று வெற்றிபெற்றது.

அக்குறணை அஸ்ஹர் தேசிய கல்லூரி சார்பில் எம். ஹிசாம் 64 அரபாத் 54 ஓட்டங்களை பெற்றதுடன் கிங்ஸ்வுட் கல்லூரி சார்பில் சானுக 52 ஓட்டங்களை பெற்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X