2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

தடகளப் போட்டி வீர, வீராங்கணைகளுக்கு அன்பளிப்புப் பொருட்கள்

Suganthini Ratnam   / 2011 ஜூன் 06 , மு.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

கிளிநொச்சி மாவட்ட மெய்வல்லுனர் சங்கத்தின் ஏற்பாட்டில் நாளை செவ்வாய்க்கிழமை கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறும் நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட தடகளப் போட்டி வீர வீராங்கணைகளுக்கு காலணிகள், சீருடைகள் உட்பட ஏனைய பொருட்கள் வழங்கி வைக்கப்படவுள்ளன.

வடமாகாண விளையாட்டுத் திணைக்கள உதவிப் பணிப்பாளரும் கிளிநொச்சி மாவட்ட மெய்வல்லுனர் சங்கத் தலைவருமான சு.கனகராசா தலைமையில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் கலந்து கொள்ளவுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X