2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டிகள்

Kogilavani   / 2011 ஜூன் 14 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான மாகாண மட்ட விளையாட்டுப் போட்டிகள் எதிர்வரும் 24 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அம்பாறையில் ஆரம்பமாகவுள்ளது.

கபடி, எல்லே, போட்டிகள் அம்பாறை பொது விளையாட்டு மைதானத்திலும், கரப்பந்து போட்டிகள் அம்பாறை டி.எஸ்.சேனநாயக்கா தேசிய பாடசாலை மைதானத்திலும் நடைபெறவுள்ளன.

மாவட்ட ரீதியாக நடத்தப்பட்ட போட்டிகளில் முதல் இரு இடங்களைப் பெற்ற அணிகளே இப்போட்டிகளில் பங்குப் பெறுகின்றன.

எதிர்வரும் 28 அம் திகதி செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பில் கிரிக்கெட்,  உதைபந்து, வலைப்பந்து, கூடைப்பந்து, மேசைப்பந்து, பூப்பந்து, ரெனிஸ், கரம், சதுரங்கம் ஆகிய போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

மெய்வல்லுநர் போட்டிகள் எதிர்வரும் ஜுலை மாதம் முதல் வாரத்தில் நடைபெறவுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை மாகாண கல்வி பணிப்பாளர் எம்.ரீ.ஏ.நிசாம் தலைமையில் உடற்கல்வி உதவிக் கல்வி பணிப்பாளர் ஜெ.உதயரெட்ணம் மேற்கொண்டு வருகின்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X