2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

கிரிக்கெட் போட்டியில் ஜொலி ஸ்ரார் விளையாட்டுக்கழகத்திற்கு வெற்றிக்கிண்ணம்

Suganthini Ratnam   / 2011 ஜூன் 17 , மு.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

ஜொலி ஸ்ரார் வெற்றிக் கிண்ணத்திற்காக யாழ். மாவட்ட கிரிக்கெட் கழகங்களுக்கிடையே நடத்தப்பட்ட  கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஜொலி ஸ்ரார் விளையாட்டுக்கழகம் 65 ஓட்டங்களினால் வெற்றி பெற்று ஜொலி ஸ்ரார் வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டது.

யாழ்ப்பாணம் ஜொலி ஸ்ரார் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லாரி மைதானாத்தில் நடத்தப்பட்ட இறுதிப் போட்டியில் யாழ்ப்பாணம் ஜொலி ஸ்ரார் விளையாட்டுக்கழகமும் கொக்குவில் மத்திய சனசமூக நிலைய விளையாட்டுக்கழகமும் மோதிக்கொண்டன.

முதலில் துடுப்பெடுத்தாடிய ஜொலி ஸ்ரார் விளையாட்டுக்கழகம் 40 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 250 ஓட்டங்களை பெற்றனர். 251 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொக்குவில் மத்திய சனசமூக நிலைய விளையாட்டுக்கழக அணி 40 ஓவர்கள் நிறைவில் 09 விக்கெட்டுக்களை இழந்து 189 ஓட்டங்களை பெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X