Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2012 பெப்ரவரி 06 , மு.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிரிசன்)
சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி மைதானத்தில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை நடைபெற்ற 19 வயதுப் பிரிவினருக்கான கால்பந்தாட்ட இறுதிப் போட்டியில் மகாஜனாக் கல்லூரியும் இளவாலை புனி ஹென்றியரசர் கல்லூரியும் மோதிக்கொண்டன.
போட்டி ஆரம்பமாகிய 05ஆவது நிமிடத்தில் மகாஜனாக் கல்லூரி தனது முதலாவது கோலைப் போட்டது. இரு அணிகளும் கோல்களை போட முயசித்தபோதிலும் கைகூடாத நிலையில் முதல் பாதி ஆட்டம் முடிவுற்றது.
இரண்டாம் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல்கள் பெறவேண்டும் என்ற இலக்குடன் விளையாடியதினால் புனித ஹென்றியரசர் கல்லூரி மூன்று மஞ்சல் அட்டைகளையும் மகாஜனாக் கல்லூரி ஒரு மஞ்சல் அட்டையையும் பெற்றுக் கொண்டது.
இரண்டாம் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல்கள் எதனையும் பெறாத நிலையில் ஆட்டம் முடிவடைந்தது.
ஆட்ட நிறைவில் மகாஜனாக் கல்லூரி 01க்கு 00 என்ற கோல் கணக்கில் இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியை வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது.
8 hours ago
19 Jul 2025
kalmunaiyaan Wednesday, 08 February 2012 09:24 PM
யாழ் மண்ணின் ஜனரஞ்சகமான விளையாட்டு. நமது பகுதியிலிருந்து புனித ஹென்றியரசர் கல்லூரிக்கு ஐவர் விளையாடி (1974-1975) 19 வயதுக்குட்பட்ட அகில இலங்கை சாம்பியன் பட்டத்தை பெற்று கொடுத்தனர்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
19 Jul 2025