2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

பேத்தாளை விபுலானந்தா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி

Kogilavani   / 2012 பெப்ரவரி 17 , மு.ப. 09:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஸரீபா)

கல்குடா கோட்டக்கல்வி அலுவலக பிரிவில் உள்ள பேத்தாளை விபுலானந்தா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை காலை வித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றது.

வித்தியாலய அதிபர் ரீ.சந்திரலிங்கம் தலைமையில் இடம்பெற்ற இவ்விளையாட்டுப் போட்டியில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன், கோறளைப்பற்று கோட்டக் கல்விப் பணிப்பாளர் என்.குணலிங்கம், கோறளைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேச பாடசாலைகளின் அதிபர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, கலை மகள் இல்லம் (பச்சை) 654 புள்ளிகளைப் பெற்று முதலாமிடத்தினையும் அலை மகள் இல்லம் (நீலம்) 604 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தினையும் மலை மகள் இல்லம் (சிவப்பு) 504 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தினையும் பெற்றுக் கொண்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X