Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2012 பெப்ரவரி 19 , மு.ப. 05:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.சுவர்ணஸ்ரீ)
பெருந்ததோட்டத்துறை இளைஞர் யுவதிகள் தமது விளையாட்டுத் திறமைகளை தேசிய மட்டத்தில் வெளிப்படுத்துவார்களானால் அவர்களுக்கு உரிய சந்தர்ப்பம் வழங்கப்படுமென்று விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே தெரிவித்தார்.
மடக்கும்புர அமர்நாத் விளையாட்டுத்திடலில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற கரப்பந்தாட்டச் சுற்றுப் போட்டியின் பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உறையாறும் போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இங்குத் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
பெருந்தோட்டத்துறையில், விளையாட்டுத்துறையை மேம்படுத்துவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் திகாம்பரம் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் பெருந்தோட்ட விளையாட்டு வீரர்கள் தமது திறமைகளைத் தோட்டங்களுக்குள் மாத்திரம் மட்டுப்படுத்திக் கொள்ளாமல் தேசிய மட்டத்திலும் தமது திறமைகளை வெளிப்படுத்துவதற்கு முன்வரவேண்டும்.
இலங்கை தேசிய கரப்பந்தாட்ட அணியில் மலையகத்தமிழ் இளைஞர்கள் இணைந்து செயற்படுகின்ற வகையில் தமது திறமைகளை வளர்த்துக்கொளள் வேண்டும். விளையாட்டுத்துறை அமைச்சர் என்ற வகையில் நுவரெலியா மாவட்டத்திலுள்ள இளைஞர் யுவதிகளுக்குத் தேவையான விளையாட்டுத்துறை சார்ந்த தேவைகள் குறித்த கோரிக்கைகளைப் நாடாளுமன்ற உறுப்பினர் திகாம்பரம் ஊடாக நீங்கள் தொடர்பு கொண்டால் நான் அந்த தேவைகளைப் பூர்த்தி செய்து தருவேன்.
இன்றைய அரசாங்கத்தின் ஊடாகவே தோட்டப்பகுதிகளில் பாரிய அபிவிருத்தித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இத்தகைய திட்டங்கள் தொடர்ந்து தோட்டத் தொழிலாளர்களின் நன்மைக்கருதி முன்னெடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
வட்டகொடை மடக்கும்புர அமர்நாத் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடதளுமன்ற உறுப்பினருமான பி.திகாம்பரம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தொழிலாளர் தேசிய சங்கத்தின் சிரேஷ்ட தொழிலுறவு மற்றும் நிர்வாக ஆலோசகரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான சிங்பொன்னையா, தேசிய அமைப்பாளர் எஸ்.ஸ்ரீதரன், பொதுச்செயலாளர் எஸ்.பிலிப் உட்பட தொழிலாளர் தேசிய சங்கத்தின் முக்கியஸ்தர்களும் ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.
52 கரப்பந்தாட்ட அணிகள் கலந்து கொண்ட இந்த கரப்பந்தாட்டச் சுற்றுப் போட்டியில் கந்தப்பளை யங்ஸ்டார் முதலாமிடத்தையும் அமர்நாத் விளையாட்டுக்கழகம் இரண்டாமிடத்தையும் டன்சினன் ரெட்ரோஸ் விளையாட்டுக்கழகம் மூன்றாமிடத்தையும் கிரேட்வெஸ்டன் கோல்ட் ஸ்டார் கழகம் நான்காமிடத்தையும் பெற்றுக்கொண்டன.
30 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
2 hours ago
4 hours ago