2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

கோட்ட மட்ட விளையாட்டு போட்டியில் அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை முதலிடம்

Kogilavani   / 2012 பெப்ரவரி 25 , மு.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

அட்டாளைச்சேனை கல்விக் கோட்டப் பாடசாலைகளுக்கு இடையிலான கோட்ட மட்ட விளையாட்டு போட்டியில் அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை அதிக புள்ளிகளைப் பெற்று முதலிடத்தினை  பெற்றுகொண்டது.

கடந்த 22 ஆம் திகதி ஆரம்பமான இப்போட்டியின் இறுதிநாள் நிகழ்வுகள் நேற்று வெள்ளிக்கிழமை பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

அட்டாளைச்சேனை கோட்டக் கல்விப் பணிப்பாளர் என்.கே.எம். இப்றாகிம் தலைமையில் இடம்பெற்ற இவ் விளையாட்டு போட்டியில் அட்டாளைச்சேனைக் கோட்டத்துக்குட்பட்ட 24 பாடசாலைகள் கலந்து கொண்டன.

இந்நிகழ்வில், பாடசாலைகளின் அதிபர்கள், விளையாட்டு ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.

                                                                    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X