Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2012 பெப்ரவரி 26 , பி.ப. 02:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஸரீபா)
வாழைச்சேனை பொலிஸாருக்கும் பொதுமக்களுக்குமிடையில் நல்லுறவை வளர்க்கும் நோக்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்யில் பொலிஸ் பிரிவு அணி சம்பியனானது.
வாழைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் பத்து ஒவர்கள் கொண்டதாக நடைபெற்ற இந்த மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் வாழைச்சேனை பொலிஸ் பிரிவு அணி, புதுக்குடியிருப்பு சிவில் பாதுகாப்பு அணி, மீறாவோடை மேற்கு சிவில் பாதுகாப்பு அணி, மீறாவோடை தமிழ் சிவில் பாதுகாப்பு அணி என நான்கு அணிகள் பங்குபற்றின.
இச்சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியில் வாழைச்சேனை பொலிஸ் பிரிவு அணியும் மீராவோடை மேற்கு சிவில் பாதுகாப்பு அணியும் மோதின.
முதலில் துடுப்பெடுத்தாடிய பொலிஸ் அணியினர் எட்டு ஓவர் முடிவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 61 ஓட்டங்களை பெற்றனர்.
பதிலுக்கு துடுப்படுத்தாடிய மீறாவோடை மேற்கு சிவில் பாதுகாப்பு அணியினர் ஒன்பது ஓவர் முடிவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து ஐம்பத்தி மூன்று ஓட்டங்களை மாத்திரம் பெற்றனர். இதனால் எட்டு ஓட்டங்களினால் வாழைச்சேனை பொலிஸ் பிரிவு அணி வெற்றி பெற்றது.
இறுதி சுற்றுப் போட்டிக்கு அதிதிகளாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.பி.ஈ.ஜயவீர, கோறளைப்பற்று பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் வீ.பூபாலராஜா, எஸ்கோ நிறுவனத்தின் பணிப்பாளர் ஸ்பிரித்தியோன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கிரிக்கெட் சுற்றுப் போட்டிக்கான அனுசரனையின எஸ்.கோ நிறுவனம் மற்றும் ஆசியா பவுன்டேசன் ஆகியன வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago