2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

தேசிய சிரேஷ்ட கூடைப்பந்தாட்டத் தொடரின் பி பிரிவில் யாழ் அணி சம்பியன்

Kogilavani   / 2012 பெப்ரவரி 27 , பி.ப. 02:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கை  கூடைப்பந்தாட்ட   சங்கம் 49 ஆவது தடவையாக நடத்திய   சிரேஷ்ட பிரிவினருக்கான  கூடைப்பந்தாட்ட போட்டியில்  யாழ்ப்பாண கூடைப்பந்தாட்ட அணியினர் 'பி' பிரிவில் முதல் தடவையாக அகில இலங்கை ரீதியில் சம்பியன்   கிண்ணத்தை சுவீகரித்துள்ளனர். 

கொழும்பு பொலிஸ் பார்க் மைதானத்தில்  நடைபெற்ற  இறுதி ஆட்டத்தில் மிகவும் பலம் வாய்ந்த அணி என கருதப்பட்ட கண்டி அணியினரை  யாழ் அணியினர் தோற்கடித்தனர்.

நான்கு காற்பகுதிகள் கொண்ட இப்போட்டியில் முதல் காற்பகுதியில், 15:9 விகிதத்தில் கண்டி அணியினர் முன்னிலையில் இருந்தனர். எனினும் பின்னர் மின்னல் வேகத்தில் புள்ளிகளை பெறத் தொடங்கிய யாழ். அணியினர் நான்காவது சுற்று முடிவில்  75:51 எனும் பாரிய  வித்தியாசத்தில் கண்டி அணியை வென்று புதிய வரலாறு படைத்தனர். 

யாழ் மாவட்ட அணி தலைவர் அமைச்சர் மகிந்தானந்த அழுத்கமகேயிடம் இருந்து சம்பியன் கிண்ணத்தை பெற்றுக்கொள்வதையும்  பி பிரிவில் முதலிடம் பெற்ற யாழ் கூடைப்பந்தாட்ட அணி  (நீலம்),  பி பிரிவில் மூன்றாம் இடம் பெற்ற வவுனியா கூடைப்பந்தாட்ட அணி (சிவப்பு), சி பிரிவில் முதல் தடவையாக கிண்ணம் வென்ற கிளிநொச்சி  (பச்சை) ஆகிய அணிகளையும் படங்களில் காணலாம். (படங்கள்:- ஜே ஜோ)


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X