Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2012 பெப்ரவரி 29 , மு.ப. 10:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
(நவரத்தினம்)
விளையாட்டுத்துறை அமைச்சின் விளையாட்டை நவீனமயப்படுத்தும் கருத்திட்டத்தின் கீழ் வெளிநாட்டுப் பயிற்சியாளர்களின் சேவையை பெற்றுக்கொண்டு உள்நாட்டு விளையாட்டுத்துறையின் மனித வளத்தை அபிவிருத்தி செய்வதற்கான செயல்முறையொன்றை செயற்படுத்துவதற்கு விளையாட்டுத்தறை அமைச்சினால் திட்டமிடப்பட்டுள்ளது.
மெய்வன்மை ஜுடோ விளையாட்டுக்கு ஆண், பெண் பங்குபற்றுநர்களிடமிருந்தும் கரப்பந்தாட்டம் மற்றும் குத்துச்சண்டை போட்டிகளுக்கு ஆண்களிடம் பங்குபற்றுநர்களிடமிருந்தும் விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
விண்ணப்பதாரிகள் 18 வயதுக்கு மேற்பட்டவர்களாகவும் 21 வயதுக்குட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டுமென்பதுடன், உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்திருத்தல் அவசியமாகும். விளையாட்டுக்களில் பெற்ற சான்றிதழ்களின் பிரதிகளை இணைத்து தாபாலுறையின் இடதுபக்க மேல்மூலையில் 'விளையாட்டை நவீனமயப்படுத்தும் கருத்திட்டம்' என எழுதி எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்பாக பணிப்பாளர், தேசிய விளையாட்டு விஞ்ஞானத்துறை நிறுவனம், 100ஃ7 சுதந்திர மாவத்தை, கொழும்பு 7 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago