2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

கிண்ணியா பிரதேச செயலகத்தின் வருடாந்த விளையாட்டுப் போட்டி

Kogilavani   / 2012 மார்ச் 18 , மு.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

கிண்ணியா பிரதேச செயலகத்தின் 38 வது வருட விளையாட்டு போட்டி நேற்று சனிக்கிழமை கிண்ணியா எழிலரங்கு மைதானத்தில் நடைபெற்றது.

பிரதேச செயலாளர் சி.கிருஷ்னேந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திருகோணமலை மேலதிக அரசாங்க அதிபர் ஏ.அருள்ராசா பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இதில் கிண்ணியா மக்கள் வங்கியின் முகாமையாளர் ஏ.எம்.லாபீர், கிண்ணியா நகரசபை செயலாளர் திருமதி யாழினி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இவ்வைபவத்தில் கிண்ணியா பிரதேசத்தைச் சேர்ந்த 44 விளையாட்டுக் கழகங்கள் பங்கு பற்றியிருந்தன.

இங்கு இடம்பெற்ற மெய் வல்லுனர் போட்டியில் பைனியர் விளையாட்டுக் கழகம் முதலிடத்தையும், இல்ஹாம் விளையாட்டு கழகம் இரண்டாமிடத்தையும், நியூவ் வேட்ஸ் கழகம் முன்றாமிடத்தையும் பெற்றுக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X