2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

பெண்களுக்கான கால்ப்பந்தாட்ட போட்டியில் யாழ்.கரவெட்டி அணி வெற்றி

Kogilavani   / 2012 மார்ச் 20 , மு.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)
வட மாகாண விளையாட்டுத் ;திணைக்களத்தின் ஆதரவுடன் யாழில் இடம்பெற்ற பெண்களுக்கான கால்ப்பந்தாட்ட போட்டியில் யாழ். கரவெட்டிப் பிரதேச செயலக அணி யாழ்.மாவட்ட சம்பினாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இறுதிப் போட்டியில் சண்டிலிப்பாய் பிரதேச செயலக அணியும் கரவெட்டிப் பிரதேச செயலக அணியும் மோதிக்கொண்டன.

போட்டியின் ஆரம்பத்தில் இரு அணிகளும் கோலகள் எதனையும் பெறாத நிலையில் ஆட்டம் சம நிலையில் முடிவடைந்தது.
போட்டியின் நிறைவில் வெற்றி தோல்வியை தீர்மானிப்பதற்க்காக வழங்கப்பட்ட சம நிலை தவிர்ப்பு உதைகளை கரவெட்டி பிரதேச செயலக அணி உரிய முறையில் பயன்படுத்திக்கொண்ட நிலையில் கரவேட்டி பிரதேச செயலக 3:1 என்ற கோல்  கணக்கில் சண்டிலிப்பாய் பிரதேச செயலக அணியை வெற்றிபெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X