2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

பெண்களுக்கான வலைப்பந்தாட்டப் போட்டியில் தெல்லிப்பளை யூனியன் கல்லூரி வெற்றி

Kogilavani   / 2012 மார்ச் 22 , மு.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கிரிசன்)

வலிகாமம் கல்வி வலயப் பாடசாலை அணிகளுக்கு இடையே இடம்பெற்ற 19 வயதுப் பிரிவுப் பெண்களுக்கான வலைப்பந்தாட்டப் போட்டியில் தெல்லிப்பளை யூனியன் கல்லூரி வெற்றிப்பெற்றுள்ளது.

தெல்லிப்பளை யூனியன் கல்லூரி மைதானத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற இறுதிப் போட்டியில் சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரியும் தெல்லிப்பளை யூனியன் கல்லூரியும் மோதிக்கொண்டன.

இதன்போது, முதல் பாதி ஆட்டமும் இரண்டாம் பாதி ஆட்டமும் தலா 13 புள்ளிகள் என்ற அடிப்படையில் முடிவடைந்தன.
இவ்விரு அணிகளுக்குமான வெற்றி தோல்வியைத் திர்மானிக்க மேலதிக ஐந்து நிமிடங்கள் வழங்கப்பட்டன.

இதிலும் முதல் இரண்டரை நிமிடத்தில் இரு அணிகளும் தலா 2 புள்ளிகளை  பெற்று சம நிலையில் காணப்பட்டன.

போட்டி முடிவடைவதற்க்கு ஒரு சில செக்கன்களே இருந்த நிலையில் யூனியன் கல்லூரி ஒரு புள்ளியைப் பெற்று வெற்றிப்பெற்றது.

மேற்படி இரு அணிகளும் மாவட்ட மட்டத்தில் மோதும் வாய்ப்பை பெற்றுக் கொண்டுள்ளன.  


  Comments - 0

  • sivanathan Friday, 23 March 2012 02:49 AM

    இம்முறை மாவட்ட மட்ட போட்டிகள் நடத்தப்பட மாட்டாது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளதே. எப்படி இரு அணிகளும் மாவட்ட மட்டத்தில் மோதும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X