2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

திருமலையில் தேசிய விளையாட்டுக்கள் ஆரம்பம்

Suganthini Ratnam   / 2012 மார்ச் 24 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரமன்)


விளையாட்டுத்துறை அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெறும் தேசிய விளையாட்டு விழாவின் திருகோணமலை மாவட்டத்திற்கான விளையாட்டுப்போட்டிகள் இன்று சனிக்கிழமை திருகோணமலை மைக்கேசியர் விளையாட்டரங்கில் ஆரம்பமாகியுள்ளன.

ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கால்பந்தாட்ட போட்டி, வலைபந்தாட்டப்போட்டி மற்றும் மல்யுத்தப்போட்டி என்பன இன்றையதினம் நடைபெற்றன.

நாளையதினம்  மரதன் ஓட்டம், சைக்கிள் ஓட்டம் மற்றும் வேகநடைப் போட்டி என்பன நடைபெறவுள்ளன. திருகோணலை மாவட்டத்தில் உள்ள சகல பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட பிரதேச செயலக பிரிவுப் போட்டிகளில் வெற்றி பெற்ற விளையாட்டுக்கழகங்களைச் சேர்ந்த குழுக்கள் இவ் மாவட்டப் போட்டிகளில் பங்குபற்ற தகுதி பெற்றுள்ளன என்றும் திருகோணமலை மாவட்ட விளையாட்டுத்துறை அதிகாரி ச.விஜயநீதன் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X