2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

புத்தாண்டையொட்டி கற்பிட்டியில் விளையாட்டுப் போட்டிகள்

Suganthini Ratnam   / 2012 மார்ச் 25 , மு.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஏ.எஸ்.எப்.ஜெஸீரா)

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு பிரதேச மட்டத்தில் விசேட விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு கற்பிட்டி பிரதேச சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக பிரதேச சபைத் தலைவர் எம்.எச்.எம்.மின்ஹாஜ் தெரிவித்தார்.

கிரிக்கெட், கால்பந்தாட்டம்,  கரப்பந்தாட்டம், எல்லை, சைக்கிளோட்டம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 19ஆம்  20ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள இப்போட்டிகளில் கற்பிட்டி பிரதேச சபைக்குட்பட்ட வீர, வீராங்கனைகள் மாத்திரமே கலந்துகொள்ள முடியுமெனவும் அவர் கூறினார்.

முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெறுகின்ற வீர, வீராங்கனைகளுக்கு  நினைவுச் சின்னங்களுடன், பரிசில்களும் வழங்கப்படவுள்ளன. 

இப்போட்டிகளில் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே, வடமேல் மாகாண முதலமைச்சர் சட்டத்தரணி அதுல விஜேசிங்க, புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை, பிரதேச சபை உறுப்பினர்கள்; அதிதிகளாக கலந்துகொள்வார்களெனவும் அவர் கூறினார்.

அத்துடன், அணிக்கு  6 பேர் கொண்ட கிரிக்கெட்  சுற்றுப்போட்டி நடத்தப்படவுள்ளதால்,  கற்பிட்டி பிரதேசசபைக்குட்பட்ட அணிகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10ஆம் திகதிக்கு முன்பாக தமது விண்ணப்பப்படிவங்களை மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி, பொருளாதார மத்திய நிலையம், நுரைச்சோலை என்ற முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X