2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

சிவில் பாதுகாப்பு குழுக்களுக்கிடையிலான கரப்பந்தாட்ட போட்டியில் ஏசியன் விளையாட்டு கழகம் சம்பியன்

Super User   / 2012 மார்ச் 25 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.ஜே.எம்.ஹனீபா)


ஆசியா மன்றத்தின் அனுசரனையுடன் சம்மாந்துறை சமுக பொலிஸ் பிரிவும் கெப்சோ அமைப்பினதும் ஏற்பாட்டில் சிவில் பாதுகாப்பு குழு உறுப்பினர்களின் பங்குபற்றலுடனான சினேகபூர்வ கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சம்மாந்துறை பொலிஸ் நிலைய விளையாட்டுத்திடலில் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி எஸ்.எல்.சம்சுதீன் தலைமையில் நடைபெற்றது.

இக்கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் நிந்தவூர் மதீனா விளையாட்டு கழகம், சம்மாந்துறை முபோ விளையாட்டு கழகம், சம்மாந்துறை பொலிஸ் கழகம் மற்றும் சம்மாந்துறை ஏசியன் விளையாட்டு  கழகம் ஆகியன பங்குகொண்டன.

இறுதி போட்டியில் நிந்தவூர் மதீனா விளையாட்டுக் கழகம், சம்மாந்துறை ஏசியன் விளையாட்டுக் கழகங்கள் தெரிவி செய்யப்பட்டன. இதில் சம்மாந்துறை ஏசியன் விளையாட்டுக் கழகம் சம்பியனாகவும்; தெரிவு செய்யப்பட்டது.

இக்கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுசந்த பிரேமலால் ரணகல, சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷாட், சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஏ.மன்சூர், காரைதீவு பிரதேச செயலாளர் ஜெகராஜன், ஆசியா மன்றத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் எம்.எஸ்.இப்திகார் றிஷாத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X