2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

பட்டணமும்சூழலும் பிரதேச விளையாட்டுக்கழகத்திற்கு சம்பியன்

Suganthini Ratnam   / 2012 ஏப்ரல் 01 , மு.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கஜன்)

விளையாட்டுத் திணைக்களம் நடத்திய திருகோணமலை மாவட்ட கழகங்களுக்கு  இடையிலான விளையாட்டுப் போட்டியில் பட்டணமும்சூழலும்  பிரதேசம் கிரிக்கெட் போட்டியில் சம்பியனாகியது.

பெண்களுக்கான போட்டியில் சேருவில பிரதேச  செயலகம் சம்பியனானது.

நேற்று சனிக்கிழமை வேல்ஸ் கழக ஆடுதிடலில் நடைபெற்ற ஆண்களுக்கான இறுதிப்போட்டியில் கிண்ணியா பிரதேச  செயலகத்தை எதிர்த்து பட்டணமும்சூழலும் பிரதேச  செயலக அணி மோதியது.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களைக் கொண்ட போட்டியில்  முதலில் துடுப்பெடுத்தாடிய  பட்டணமும்சூழலும் பிரதேச செயலக அணி சகல விக்ன்கட்டுக்களையும் இழந்து 106 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. பதிலுக்கு விளையாடிய கிண்ணியா பிரதேச  செயலக அணி 19.3 ஓவரில் சகல விக்ன்கட்டுக்களையும் இழந்து 95 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது.

இதன் மூலம் பட்டணமும்சூழலும் அணி 11 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

பெண்களுக்கான போட்டியில் பட்டணமும்சூழலும் பிரதேச  செயலக அணி சேருவில பிரதேச  செயலக அணியிடம் தோல்வியைத் தழுவி இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X