2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

கூடைப்பந்தாட்டப் போட்டியில் மருதனார்மடம் இராமநாதன் கல்லூரி சம்பியன்

Kogilavani   / 2012 ஏப்ரல் 06 , மு.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கிரிசன்)


வலிகாமம் கல்வி வலயப் பாடசாலை அணிகளுக்கு இடையே இடம்பெற்ற பெண்களுக்கான கூடைப்பந்தாட்டப் போட்டியில் மருதனார்மடம் இராமநாதன் கல்லூரி வலய சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.

மருதனார்மடம் இராமநாதன் கல்லூரி மைதானத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை 3ஆம் திகதி பிற்பகல் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தரப் பாடசாலை அணியும் மருதனார்மடம் இராமநாதன் கல்லூரி அணியும் மோதிக் கொண்டன.

நான்கு கால் பாதி ஆட்டங்களைக் கொண்ட இந்தப் போட்டியில் முதல் மூன்று கால் பாதி ஆட்டங்களிலும் பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தரப் பாடசாலை அணி சிறப்பாக துடுப்பெடுத்தாடியது.

4 கால் பாதி ஆட்டத்திலும் இராமநாதன் கல்லூரி  13:9,  16:15, 9:6 20:9 புள்ளிகள் விகிதத்தில் வென்றது.   ஆட்ட நிறைவில் இராமநாதன் கல்லூரி 58:39 புள்ளிகள் விகிதத்தில்  வென்றது.

இப் போட்டியில் இராமநாதன் கல்லூரியைச் சேர்ந்த எஸ்.சுவேனியா 27,  சுகன்யா 15, எஸ்.லக்சனா 11, எஸ்.சோபனா 5 என்ற புள்ளிகளை அணிக்கு பெற்றுக்கொடுள்ளதனர்.

பண்டத்தரிப்பு பெண்கள் உயாதரப் பாடசாலை அணியைச் சேர்ந்த எஸ்.கிரிஷாந்தினி 30,  சி.றொசாந்தினி ஆh.சபீனா தலா 3,  ஜ.கௌரிகா 2, எஸ.கீர்த்திகா 1 என்ற புள்ளிகளை பெற்றுக் கொடுத்தனர்.

போட்டியில் ஆட்ட நாயகியாக இராமநாதன் கல்லூரியை சேர்ந்த எஸ்.சுவேனியாவும் போட்டியின் தொடர் ஆட்ட நாயகியாக பண்டத்தரிப்பு மகளிர் கல்லூரி யைச்சேர்ந்த எஸ்.கிரிசாந்தினியும் தெரிவு செய்யப்பட்டார்கள்.









  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X