2025 ஜூலை 21, திங்கட்கிழமை

மூதூரில் இளைஞர் கழகங்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகள்

Suganthini Ratnam   / 2012 ஏப்ரல் 29 , மு.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


(முறாசில்)

மூதூர் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள இளைஞர் கழகங்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வு நேற்று சனிக்கிழமை மூதூர் பொது மைதானத்தில் நடைபெற்றது.

இளைஞர் சேவை உத்தியோகத்தர் எம்.ரீ.முபாரிஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய கால்நடை உற்பத்தி மற்றும் கிராமிய கைத்தொழில் அபிவிருத்தி, மீன்பிடி அமைச்சர் துரையப்பா நவரெட்ணராஜா,  மூதூர் பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எம்.ஹரீஸ்,  மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி எஸ்.ரவிக்குமார், உதவித் திட்டமிடல் அதிகாரி ஏ.எஸ்.எம்.பாயிஸ்,  மூதூர் பிரதேச சபை உறுப்பினர்களான பீ.எம்.நஸீர், பி.டி.எம்.பைஸர் மற்றும் மாகாண அமைச்சரின் இணைப்பாளர் ஏ.எஸ்.எம். நஸ்ருல்லா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அனைத்துப் போட்டிகளிலும் திறமையை வெளிப்படுத்தி 126 புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட  அல்-ஹிலால் இளைஞர் கழகம்  முதலிடத்தை சுவீகரித்துக் கொண்டது. 94 புள்ளிகளுடன் எம்.சி.சி. இளைஞர் கழகம் இரண்டாம் இடத்தையும் 58 புள்ளிகளுடன் அல். ஹிதாயா இளைஞர் கழகம் மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டன.

மூதூரின் சாகச வீரரான  எஸ்.ஹஸன் பஸ்ரி மற்றும் அவரது புதல்வர் ஹஸனுல் பன்னாஹ் ஆகியோரின் சாகச நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X