2025 ஜூலை 21, திங்கட்கிழமை

பெண்களுக்கான மேசைப்பந்தாட்ட இறுதிப் போட்டியில் தெல்லிப்பளை யூனியன் கல்லூரி வெற்றி

Kogilavani   / 2012 ஏப்ரல் 29 , மு.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கிரிசன்)

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மேசைப்பந்தாட்ட அணியும்  விளையாட்டு அவையும் இணைந்து நடத்திய பெண்களுக்கான மேசைப்பந்தாட்ட இறுதிப் போட்டியில் தெல்லிப்பளை யூனியன் கல்லூரி வெற்றி பெற்றுள்ளது.

யாழ். பல்கலைக்கழக உள்ளக அரங்கில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் யாழ். பல்கலைக்கழக அணியும் தெல்லிப்பளை யூனியன் கல்லூரி அணியும் மோதிக் கொண்டன.

இந்தப் போட்டியில் மூன்று ஒற்றையர்கள் சுற்று இடம்பெற்றன.

முதல் ஒற்றையர் சுற்றில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வி.கல்யாணியும் தெல்லிப்பளை யூனியன் கல்லூரியைச் சேர்ந்த ஐ.டென்சிகாவும்; மோதிக் கொண்டார்கள்.

மூன்று நேர் சுற்றுக்களையும் தெல்லிப்பளை யூனியன் கல்லூரியைச் சேர்ந்த ஐ.டென்சிகா 11:8, 11:3, 11:9 புள்ளிகள் என்ற அடிப்படையில் வெற்றிபெற்றார்.

இரண்டாவது ஒற்றையர் சுற்றில் தெல்லிப்பளை யூனியன் கல்லூரியைச் சேர்ந்த எஸ்.சிந்துஜாவும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த எஸ்.துஷ்யந்தியும் மோதிக்கொண்டார்கள்.

இச்சுற்றிலும் தெல்லிப்பளை யூனியன் கல்லூரியைச் சேர்ந்த எஸ்.சிந்துஜா 11:3, 11:1, 11:6 புள்ளிகள் அடிப்படையில் முதல் மூன்று நேர் சுற்றுக்களையும் வெற்றி பெற்றார்.

மூன்றாவது ஒற்றையர் சுற்றில் யாழ்.பல்கழகத்தைச் சேர்ந்த் ரி.தரனிகாவும் தெல்லிப்பளை யூனியன் கல்லூரியைச் சேர்ந்த ரி.கீர்த்தனாவும் மோதிக் கொண்டார்கள்.

இந்தப் போட்டியில் முதலாம் இரண்டாம் சுற்றுக்களையும்; மற்றும் ஐந்தாம் சுற்றுக்களை தெல்லிப்பளை யூனியன் கல்லூரியைச்  சேர்ந்த ரி.கீர்த்தனா முறையே 11:9, 11:8, 13:11 புள்ளிகள் என்ற அடிப்படையில் வெற்றி பெற யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தைச்; சேர்ந்த ரி.தரணிகா இரண்டாம் மற்றும் மூன்றாம்; சுற்றுக்களை முறையே 11:2, 11:7 புள்ளிகள் என்ற அடிப்படையில் வெற்றிபெற்றார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X