2025 ஜூலை 21, திங்கட்கிழமை

தெல்லிப்பளையில் புத்தாண்டு விளையாட்டுப் போட்டி

Kogilavani   / 2012 ஏப்ரல் 29 , மு.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கிரிசன்)

தெல்லிப்பளை பொலிஸாரும் தெல்லிப்பளை பிரதேச செயலகமும் இணைந்து நடத்திய சித்திரைப் புத்தாண்டு நிகழ்வுகள்  நேற்று சனிக்கிழமை காலை மல்லாகம் மகா வித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றது.  

சையிக்கிளோட்டப் போட்டி, மரதன் ஓட்டப் போட்டி, வலைப்பந்தாட்டம், கபடி, கரப்பந்தாட்டம், உட்பட பல்வேறு கிராமிய போட்டிகளும் இதன்போது இடம்பெற்றன.

தெல்லிப்பளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி லலித் விரசிங்க தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மகாஜனக் கல்லூரி அதிபர் எஸ்.வேல்சிவானந்தன், காங்கேசன்துறை பொலிஸ் அத்தியட்சகர் காமினிநவரட்னா, மேஜர் ஜெகத்குமாரா, நிர்வாகக் கிராம அலுவலர், கு.இ.சாந்தமோகன்  உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது வெற்றிப்பெற்றவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X