2025 ஜூலை 21, திங்கட்கிழமை

அருட்தந்தை ஹேபர்ட் வெற்றிக்கேடய கூடைப்பந்தாட்டத்தில் கொழும்பு கூடைப்பந்தாட்டக் கழகம் வெற்றி

Suganthini Ratnam   / 2012 ஏப்ரல் 30 , மு.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி,ரி.லோஹித்)

அருட்தந்தை ஈ.ஜே.ஹேபர்ட் வெற்றிக்கேடயத்திற்கான மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி கூடைப்பந்தாட்ட மைதானத்தில் நடைபெற்ற தேசிய கூடைப்பந்தாட்ட போட்டியில் கொழும்பு கூடைப்பந்தாட்ட கழகம் வெற்றியீட்டியது.

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் பழைய மாணவர் சங்கமும் அதன் கொழும்புக் கிளையும் இணைந்து நடத்திய இக்கூடைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமானது.   இதன் இறுதிப்போட்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்றது.

7 கூடைப்பந்தாட்ட அணிகள் பங்குகொண்ட இச்சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியில் பொலிஸ் விளையாட்டுக் கழகத்துக்கும் கொழும்பு கூடைப்பந்தாட்ட கழகத்திற்கும் இடையில் நடைபெற்றது. கொழும்பு கூடைப்பந்தாட்ட கழகம் 77 புள்ளிகளையும் பொலிஸ் விளையாட்டுக்கழகம் 53 புள்ளிகளையும் பெற்று கொழும்பு கூடைப்பந்தாட்ட விளையாட்டுக்கழகம் வெற்றியீட்டி வெற்றிக்கேடயத்தை சுவீகரித்தது.

யாழ். மாவட்ட அணி, அம்பாந்தோட்டை ஹால்டன், கொழும்பு ஒட்டஸ் கழகம், கொழும்பு மாவட்ட அணி, மட்டக்களப்பு மாவட்ட அணிகள் இரண்டு, புனித மிக்கேல் கல்லூரி அணி ஆகிய அணிகள் இச்சுற்றுப் போட்டியில் பங்குகொண்டன.

மட்டு., திருமலை மறைமாவட்ட துணை ஆயர் பொன்னையா ஜோசப், எஹெட் கரிட்டாஸ் நிறுவன இயக்குநர் அருட்தந்தை கிறைட்டன் அவுட்ஸ்கோன்,  இராணுவ, பொலிஸ் அதிகாரிகள், புனித மிக்கேல் கல்லூரியின் பழைய மாணவர் சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X