2025 ஜூலை 21, திங்கட்கிழமை

'புளு இலவன்' சம்பியன்

Menaka Mookandi   / 2012 ஏப்ரல் 30 , மு.ப. 08:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட்)


அட்டாளைச்சேனை 'எவர் டொப்' விளையாட்டுக் கழகத்தின் 16ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு நடத்தப்பட்ட மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டியில் அட்டாளைச்சேனை 'புளு இலவன்' விளையாட்டுக் கழகம் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.

மேற்படி சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியும், முதல் மூன்று இடங்களை வெற்றி கொண்ட அணிகளுக்கான பரிசளிப்பு நிகழ்வும் நேற்று ஞாயிற்றுக்கிழமை அட்டாளைச்சேனை அஷ்ரப் ஞாபகார்த்த விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

அணிக்கு 07 பேரையும் 05 ஓவர்களையும் கொண்ட மேற்படி சுற்றுக் போட்டியில் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த 30 விளையாட்டுக் கழகங்கள் பங்குபற்றின.

இந்த நிலையில், இறுதிப்போட்டிக்கு தெரிவாகிய எவர் டொப் மற்றும் புளு இலவன் விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான போட்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை அட்டாளைச்சேனை அஷ்ரப் ஞாபகார்த்த விளையாட்டரங்கில் நடைபெற்றது.

நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற புளு இலவன் அணியினர் முதலில் துடுப்படுத்தாடி  நான்கு விக்கட்கள் இழப்பிற்கு 81 ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர். பதிலுக்கு துடுப்படுத்தாடிய எவர்டொப் அணியினர் குறிப்பிட்ட ஓவர் முடிவின் போது நான்கு விக்கட்டுக்களை இழந்து 75 ஓட்டங்களை மட்டுமே பெற்றனர். இதன்படி புளு இலவன் கழகம் 05 ஓட்டங்களினால் வெற்றிபெற்றது.

எவர்டொப் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் எஸ்.எல். அலிம்சார் தலைமையில் இடம்பெற்ற பரிசளிப்பு நிகழ்வில் கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு வெற்றிபெற்ற அணியினருக்கான கேடயத்தையும் ஐயாயிரம் ரூபாவுக்கான காசோலையினையும் வழங்கி வைத்தார்.

இரண்டாமிடத்தினை வெற்றி கொண்ட கழகத்துக்கம் மற்றும் சிறந்த வீரருக்கான பரிசில்களை முறையே - அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி யூ.எம். ஹாஜா முகைடீன் மற்றும் அதிபர் எம்.ஐ.எம். றியாஸ் ஆகியோர் வழங்கி வைத்தனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X