2025 ஜூலை 21, திங்கட்கிழமை

கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் மல்லாகம் றைனோர்ஸ் விளையாட்டுக் கழகம் சம்பியன்

Kogilavani   / 2012 ஏப்ரல் 30 , மு.ப. 08:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கிரிசன்)

மல்லாகம் கிராம அபிவிருத்தி சங்க விளையாட்டுக்கழகம், மல்லாகம் பிரதேச மட்டக் கிரிக்கெட் விளையாட்டுக் கழகங்களுக்கு இடையே இடம்பெற்ற மல்லாகம் பிரிமியர் லீக் இருபதுக்கு இருபது கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் மல்லாகம் றைனோர்ஸ் விளையாட்டுக் கழகம் சம்பியனாகியுள்ளது.

மல்லாகம் ஸ்ரீ பாஸ்கரன் விளையாட்டு மைதானத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற இறுதிப் போட்டியில் றைனோர்ஸ் விளையாட்டுக் கழகமும் ஸ்பைடர்ஸ் விளையாட்டக்கழகமும் மோதிக்கொண்டன.

முதலில் துடுப்பெடுத்தாடிய மல்லாகம் றைனோர்ஸ் விளையாட்டுக்கழகம் 13.4 ஓவர்களில்; சகல விக்கெட்டுக்களையும் இழந்து 76 ஓட்டங்களை பெற்றது.

இவ் அணியில் அஜித் 15, கிரிசன 13 ஓட்டங்களை பெற்றதுடன் உதிரிகளாக 21 ஓட்டங்களும் பெறப்பட்டன.

ஸ்பைடர்ஸ் விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த எஸ்.ஜிந்தா 4 ஓவர்கள் பந்து விசி 25 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும் விமல் 3.4 ஓவர்கள் பந்து விசி 12 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும் காந்த சீலன் 3 ஓவர்கள் பந்து வீசி 16 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும் கௌசிபன் 8 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார்கள்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஸ்பைடர்ஸ் விளையாட்டுக்ழகம் 11.4 ஓவரில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 46 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இவ் அணியில் காந்தசீலன் 10 ஓட்டங்களை பெற்றதுடன் உதிரிகளாக 13 ஓட்டங்களும் பெறப்பட்டன.

றைனோர்ஸ் விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த சுதன் 3.4 ஓவர்கள் பந்து வீசி 7 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டையும் ரகுநாத் ஒரு ஓவர் பந்து வீசி ஒரு ஓட்டத்திற்;கு 2 விக்கெட்டையும் அனுராஜன் 3 ஓவர்கள் பந்து விசி 14 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும் அஜித் 23 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

போட்டியின் ஆட்டநாயகனாக ரைனோர்ஸ் விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த அஜித்தும் போட்டிகளின் தொடர் ஆட்டநாயகனாக ஸ்பைடர்ஸ் விளையாட்டுக் கழகத்தைச்சேர்ந்த விமலும் தெரிவு செய்யப்பட்டார்கள்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X