2025 ஜூலை 21, திங்கட்கிழமை

'கொள்சிம்' கிண்ண கால்ப்பந்தாட்ட போட்டியில் ஏறாவூர் யங் ஸ்டார் விளையாட்டுக்கழகம் வெற்றி

Menaka Mookandi   / 2012 ஏப்ரல் 30 , பி.ப. 12:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


(அப்துல் அஸீஸ்)


அகில இலங்கை கால்ப்பந்தாட்ட சம்மேளனம் நடத்தும் 'கொள்சிம்' கிண்ணத்திற்கான கால்ப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் ஆரம்பகட்டப் போட்டிகளில் ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை கல்முனை ஐக்கிய மைதானத்தில் இடம்பெற்றது.

இப்போட்டியில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த ஏறாவூர் யங் ஸ்டார் விளையாட்டுக் கழத்திற்கும,; அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த கல்முனை சனிமௌன்ட் விளையாட்டுக் கழகத்திற்கும் இடையில் இடம்பெற்றது.

இதில் ஏறாவூர் யங் ஸ்டார் விளையாட்டுக் கழகம் மூன்றுக்கு பூச்சியம் என்ற எண்ணிக்கையில் கோல்களையிட்டு கல்முனை சனிமௌன்ட் விளையாட்டுக் கழகத்தை வெற்றியீட்டியது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கே.எம்.அப்துல் றஸாக் (ஜவாத்), கௌரவ அதிதியாக மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி ஏ.எம்.றகீப், அதிதிகளாக மாநகர சபை உறுப்பினர்களான ஏ.எம்.றியாஸ், எம்.நபார்,  ஓய்வுபெற்ற கல்விக்கல்லூரி சிரேஸ்ட விரிவுரையாளர் எம்.ஐ.எம்.முஸ்தபா உள்ளிட்ட விளையாட்டுத் துறைசார்ந்த பலர் கலந்துகொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X