2025 ஜூலை 21, திங்கட்கிழமை

அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையின் இணைந்த மரதன் சைக்கிளோட்ட போட்டி

Kogilavani   / 2012 மே 07 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட்)

அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையின் நூற்றாண்டு விழாவினைக் கொண்டாடும் முகமாக திறந்த மட்டத்திலான இணைந்த மரதன், சைக்கிளோட்டப் போட்டி நிகழ்வு இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது.

பாடசாலை அதிபர் வி.ரி.எம். ஹனீபா மௌலவி தலைமையில் இடம்பெற்ற இந்தப் போட்டி நிகழ்வில் ஏராளமான போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

அக்கரைப்பற்று மணிக்கூட்டு கோபுர பிரதான வீதியில் மேற்படி போட்டி இன்று காலை ஆரம்பமாகியது. 

மேற்படி இணைந்த மரதன், சைக்கிளோட்டப் போட்டியில் கலந்து கொண்டோர் அக்கரைப்பற்றில் இருந்து அட்டாளைச்சேனை வரை மரதன் ஓட்டமாக வந்து அட்டாளைச்சேனை லக்கி ஸ்டோர் முன்பாக சைக்கிள் ஓட்டத்தினை ஆரம்பித்து ஒலுவில் துறைமுகப் பாதை வரை சென்று – மீண்டும்; அதே வழியாகத் திரும்பி அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை முன்பாகவுள்ள முடிவிடத்தினை வந்தடைந்தனர்.

இப் போட்டியில் வெற்றியீட்டியோருக்கு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் நசார் ஹாஜியார் பெறுமதியான பணப் பரிசில்களை வழங்கி வைத்தார்.

பரிசு வழங்கும் நிகழ்வில் பாடசாலையின் பிரதி அதிபர்கள், ஆசியர்கள் மற்றும் விளையாட்டு உத்தியோகஸ்த்;தர்களும் கலந்துகொண்டனர்.

1912 ஆம் ஆண்டு சாதனா பாடசாலை எனும் பெயரில் ஆரம்பிக்கப்பட்ட அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை இவ் வருடம் தனது நூற்றாண்டினை நிறைவு செய்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.



                                                                                       

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X